பெங்களுரூ:
ர்நாடக முதலமைச்சர் பி எஸ் எடியூரப்பா பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருக்கும் அவருடைய மகன் பி ஒய் விஜயேந்திரா மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறிதேனும் உண்மை இருந்தால் அரசியலிலிருந்து தான் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் கட்சியில் மூத்தவரான சித்தராமையா நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது பாஜக அரசுக்கு எதிராகவும், பிஎஸ் எடியூரப்பா ல்வின் மகன் விஜயேந்திரா… பெங்களூரு மேம்பாட்டு ஆணைய ஒப்பந்தகாரரிடமிருந்து லஞ்சம் வாங்கி உள்ளார் என்றும் குற்றம்சாட்டினார்.

666 கோடி ரூபாய் திட்டத்தை தனதாக்கிக் கொண்ட பெங்களூரு மேம்பாட்டு ஆணைய ஒப்பந்தகாரர் ஒருவர் எடியூரப்பாவின் மகன் விஜேயேந்திராவிற்கு ரூபாய் ஒரு கோடி லஞ்சம் வழங்கியதாக ஒரு கன்னட தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.

இந்த குற்றச்சாட்டை எதிர்த்த கர்நாடக முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா தெரிவித்துள்ளதாவது: என் குடும்ப உறுப்பினர் மீது சுமத்தப்பட்ட பழியில் சிறிதேனும் உண்மை இருந்தால் நான் அரசியலிலிருந்து விலகுவேன், ஒருவேளை அது தவறு என்றால் நீங்கள் ராஜினாமா செய்துவிட வேண்டும். இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிக்க நீங்கள் வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க லோக் ஆயுக்தா மற்றும் ஊழல் தடுப்பு பணியகத்திடம் புகாரளிக்குமாறு சித்தராமையாவுக்கு சவால் விடுத்துள்ளார் எடியூரப்பா.

மேலும் இதைப்பற்றி சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஜேசி மதுஸ்வாமி, லஞ்சம் கொடுத்ததாக சித்தராமையா குற்றம்சாட்டிய ஒப்பந்தகாரர் குறிப்பிட்டு தொலைக்காட்சிக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சித்தராமையா, இதில் நியாயமான விசாரணை நடக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.