‘நீட்’ சேர்க்கை நிறுத்தம்: சி.எம்.சி. மருத்துவக்கல்லூரி அதிரடி

--

வேலூர்:

புகழ் பெற்ற வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி நிர்வாகம், நீட் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையை  அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள  நீட் தேர்வு அடிப்படையில் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரியை பொறுத்தவரையில் மருத்துவர் மாணவர் சேர்க்கை தனியாக தேர்வெழுதி நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வு மூலம் நிரப்ப அரசு அறிவுறுத்தியிருந்தது.

ஆனால், மத்திய அரசின் கோரிக்கையை சிஎம்சி நிர்வாகம் மறுத்துள்ளது.

கிறிஸ்தவ மைனாரிட்டி அமைப்பான சிம்எம்சி  நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு 100 இடங்கள் உள்ளன. இதில் 85 இடங்கள் சிறுபான்மையினருக்கானது. மீதமுள்ள 15 இடங்கள் பொதுப்பிரிவினருக்கானது.

சிறுபான்மையினர் கோட்டாவில் சேர்க்கப்படும் மாணவர்கள், தங்களது படிப்பு முடிந்த பின்னர் சி.எம்.சி. நிர்வாகத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்பது நிபந்தனை.

இந்நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள நீட் தேர்வு அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை சிஎம்சி நிர்வாகம் ஏற்க மறுத்துள்ளது.  அரசின் இந்த முடிவு தங்களது நிர்வாக முறைக்கு எதிரானது. எனவே, நீட் மூலம் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைப்பதாக வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ் படிப்புக்கான 100 இடங்கள், 60 உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கான சேர்க்கையை வேலூர் சி.எம்.சி. நிர்வாகம் நிறுத்தி வைத்திருக்கிறது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 30 (1)ன்படி மத மற்றும் மொழி சிறுபான்மையினர்  தங்கள் விருப்பப்படி “கல்வி நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் நிர்வகிப்பது” ஆகியவற்றை உறுதிப்படுத்து கிறது.

எனவே மத்திய அரசின் இந்த உத்தரவு தங்களை கட்டுப்பாடுத்தாது என்று சிஎம்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மைனாரிட்டிகளுக்கான  இந்த உரிமை, 1957 ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தின் பதினோ ராவது நீதிபதி பெஞ்ச், பாயின் வழக்கில் வழங்கப்பட்ட முக்கிய தீர்ப்பாகும். மைனாரிட்டிக்கான அங்கீகாரம்  இதுபோன்ற தீர்ப்புகளை உச்ச நீதிமன்றத்தின் தொடர்ச்சியான தீர்ப்புகள் மூலம் அங்கீகரிக்கப்பட்டது.

மத்தியஅரசின் நீட் தேர்வுக்கு எதிராக இரண்டு வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.