சிஎம்டிஏ, டிடிசிபி: கட்டிட அனுமதி ஆய்வு குறித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு!

சென்னை:

மிழகத்தில் கட்டடிடங்கள் மற்றும் நிலங்களுக்கான அனுமதி தொடர்பாக சிஎம்டிஏ, டிடிசிபி நிர்வாகங்கள் எது சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொண்டு அனுமதி வழங்க வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

கட்டிட அனுமதி அளிக்கும் போது எந்த அதிகாரி எந்த வகையான கட்டிடத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று அதில் விளக்கப்ட்டு உள்ளது.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தொழில் தொடங்குவதற்கு வசதியாக ஒற்றை சாளர முறையில் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதில் அனுமதி வழங்குவது தொடர்பாக சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் மற்றும் டிடிசிபி- நிரவாகங்களுக்கு இடையே ஏற்பட்டு வரும் பிரச்சினைகளை தொடர்ந்து,  கட்டிடங்களை ஆய்வு செய்துவது தொடர்பாக யாருக்கு என்ன அதிகாரம் என்பதை வரையறுத்து  தமிழக அரசு அரசாணை  வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது,

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 12 உயரம் மற்றும் 750 சதுர அடிக்கு வரையுள்ள வீடுகள் மற்றும்  12 அடி உயரம் மற்றும் 300 சதுர அடி வரையுள்ள வணிக கட்டிடங்கள் ஆகியவற்றை உதவி பிளானர்  அல்லது உள்ளாட்சி அமைப்பின் உதவி பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும்.

12 அடி முதல் 18.3 அடி வரை உயரம் உள்ள வீடுகளை உதவி பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும்.

300 சதுர அடி முதல் 7500 சதுர அடி வரையுள்ள மற்ற வகை  கட்டிடங்கள், 7500 சதுர அடி முதல் 30 ஆயிரம் சதுர அடி வரையுள்ள மற்ற  வகை கட்டிடங்களை துணை பிளானர் ஆய்வு செய்ய வேண்டும்.

30 ஆயிரம் சதுர அடி முதல் 1 ஹேக்டேர் வரையுள்ள கட்டிடங்களை தலைமை பிளானர் ஆய்வு  செய்ய வேண்டும். 

இதைப்போன்று நகர் ஊரமைப்பு இயக்கத்தின் கீழ் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

12 உயரம் மற்றும் 750 சதுர அடிக்கு வரையுள்ள வீடுகள் மற்றும் 12 அடி உயரம்  மற்றும் 300 சதுர அடி வரையுள்ள வணிக கட்டிடங்கள் ஆகியவற்றை உதவி இயக்குனர் அல்லது உள்ளாட்சி அமைப்பின் உதவி பொறியாளர் ஆய்வு  செய்ய வேண்டும்.

12 அடி முதல் 18.3 அடி வரை உயரம் உள்ள வீடுகளை உதவி இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும்.

300 சதுர அடி முதல் 7500 சதுர அடி வரையுள்ள மற்ற வகை கட்டிடங்கள், 7500  சதுர அடி முதல் 30 ஆயிரம் சதுர அடி வரையுள்ள மற்ற  வகை கட்டிடங்களை துணை இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும்.

30 ஆயிரம் சதுர அடி முதல் 1  ெஹக்டேர் வரையுள்ள கட்டிடங்களை இணை இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.