3வது பேருந்து நிலையம்: பூந்தமல்லியில் நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்க உள்ள சிஎம்டிஏ

சென்னை:

சென்னையில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில், 3வது பேருந்து நிலையம் பூந்தமல்லியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான  நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும் என சிஎம்டிஏ (சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்)  தெரிவித்து உள்ளது.

தற்போது தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் வாகன நெரிசலை கட்டுப்பட்டும் வகையில் நகருக்கு வெளியே தற்காலிக பேருந்து நிலையங்கள்  அமைக்கப்பட்டு  போக்குவரத்து நெரிசலை மாநில அரசு குறைத்து வருகிறது.

சமீபத்தில் மாதவரத்தில், கோயம்பேடு பேருந்து நெரிசலை குறைக்கும் வையும் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. தற்போது அங்கிருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகளின் நெரிசல் சற்று குறைந்துள்ளது.

இந்த நிலையில், மேற்கு பகுதிக்கு செல்லும் பேருந்துகள் இயக்க வசதியாக 3வது பேருந்து நிலையிம் பூந்தமல்லியில் அமைக்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி, பூந்தமல்லிக்கு வெளியே சுமார் 15 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக தனியாரிடமிருந்து  நிலம் கையப்படுத்துதல் பணியை சிஎம்டிஏ விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.