சென்னை:
மெட்ரோ ரயில் திட்டத்தில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையில் இருக்கும், ஷெனாய் நகர் மற்றும் திருமங்கலத்திற்கிடையே 1240. 30 கோடி ரூபாய் செலவிலும், எக்மோர் மற்றும் வண்ணாரப்பேட்டை இடையே 1847.28 கோடி ரூபாய் செலவிலும் மும்பையைச் சார்ந்த நிறுவனம் மேற்கொண்ட பணியில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளது.

ஷெனாய் நகரிலிருந்து திருமங்கலம் மெட்ரோ ரயில் நீட்டிப்பிற்க்கு ஒப்பந்த விலையான 1030.99 கோடியை விட 209.31 கோடி அதிகமாக சென்னை மெட்ரோ ரயில் செலுத்தியது. மேலும் எக்மோரிலிருந்து வண்ணாரப்பேட்டை 1566 6.81 ஒப்பந்த விலையைவிட 280.43 கோடி அதிகமாக செலுத்தியது என்று நீதிபதி என் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார், இவ்வளவு அதிகமாக செலுத்தியும் கூட ஒப்பந்தக்காரர்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்காமலும், செய்யப்பட்ட வேளையிலே பல குறைபாடுகளும் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பல பணிகள் முழுமையடையாமல் இருப்பதாகவும், நிறைவேற்றப்பட்ட பணிகளில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாகவும் சென்னை மெட்ரோ ரயில் சார்பாக தெரிவிக்கப்பட்டாலும், ஒப்பந்தகாரர்கள் குறைபாடுகள் மிகவும் சிறியதாகவே உள்ளன என்று தெரிவித்துள்ளனர்.

இந்த இரு தரப்பின் விவாதத்தையும் நன்கு ஆராய்ந்த நீதிபதி குமார்: வழக்கில் சில மோதல்கள் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்குட்பட்டவை என்று தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மெட்ரோ ரயில் சார்பாக பேசிய மூத்த ஆலோசகர் ஆர். யஷோத் வர்தன் 2010- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செனாய் நகர் மற்றும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு கான ஒப்பந்தத்தை வழங்கியதாகவும். 2011- ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதிக்குள் பணிகளை முடிப்பதற்கான முறையான ஒப்பந்தத்தில் மும்பை நிறுவனம் கையெழுத்திட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மும்பை நிறுவனத்தின் சார்பாக பேசிய மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி யின் கோரிக்கைப்படி, மூத்த வழக்கறிஞர்களுக்கு முன் மேல்முறையீடு செய்துவிட்டு, அவர்கள் இந்த வழக்கை விசாரிக்கும் வரை தீர்ப்பை ஒத்திவைக்க கோரினார். ஆகையால் இவர்களுக்கு ஆகஸ்ட் 21- ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவகாசத்திற்குள் மேல்முறையீடு செய்யாவிட்டால் சென்னை மெட்ரோ ரயிலுக்கு அவர்களுடைய கட்டணத்தை திரும்ப செலுத்த வேண்டிவரும் என்றும் நீதிபதி குமார் தெரிவித்துள்ளார்