புகழ்பெற்ற தெலைக்காட்சி நிறுவனமான சி.என்.என்., ஒரு பயங்கரவாத நிறுவனம் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் அதிர்ச்சி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வரும் 20ம் தேதி அவா் முறைப்படி அதிபராக பதவியேற்க இருக்கிறார்.

இந்த நிலையில், புகழ் பெற்ற சி.என்.என். தொலைக்காட்சியில், அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது.  டொனால்ட் டிரம்ப் ரஷ்யா சென்றிருந்தபோது, பாலியல் தொழிலாளர்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும், அந்த வீடியோ ரஷ்ய உளவுத்துறை வசம் இருப்பதாகவும் சி.என்.என் தொலைக்காட்சி  செய்தி வெளியிட்டது.

இதனை பகிரங்கமாக டிரம்ப் கடுமையாக மறுத்தார்.  இந்நிலையில், நியூயார்க்கில் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சி.என்.என் தொலைக்காட்சியின் செய்தியாளர் ஜிம் அகோஸ்டா, கேள்வி கேட்க முற்பட்டார்.

அவரை தடுத்த நிறுத்திய டொனால்ட் டிரம்ப், “உங்களது சி.என்.என். தொலைக்காட்சி ஒரு  ஒரு பயங்கரவாத நிறுவனம், நீங்கள் கேள்வி கேட்கக்கூடாது” என்று ஆவேசமாக தெரிவித்தார். .

ஆனாலும் அந்த செய்தியாளர், தொடர்ந்து கேள்வி கேட்க முயன்றபோது,  பதிலளிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.

பிறகு டிரம்ப், “பார்வையாளர்களை அதிகரிப்பதற்காக ஆதாரமற்ற தகவல்களை சி.என்.என் வெளியிட்டு வருகிறது. இது பரிதாபகரமானது” என்றார்.