டில்லி:

கூட்டுறவுச் சங்க தேர்தல் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் திமுக கேவியட் மனு  தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஐகோர்ட்டு கிளை தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து, உயர்நீதி மன்றம் விதித்த தடையை எதிர்த்து, கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதில், கூட்டுறவு சங்க தேர்தல் விதிமுறைகள் படி, தேர்தல் நடவடிக்கைகளில் உயர்நீதி மன்றம் தடை விதிக்க முடியாது என்றும், மதுரை உயர்நீதி மன்றத்தில் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று  கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கூட்டுறவுச் சங்க தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில்  திமுக கொறடா சக்கரபாணி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில்,  அதில்,  கூட்டுறவுச் சங்க தேர்தல் வழக்கில் தங்கள் தரப்பையும் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.