கூட்டுறவு சங்கத் தேர்தல்: சென்னையில் அதிமுக கோஷ்டி மோதலில் வேட்புமனு கிழிப்பு

சென்னை:

சென்னையில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான  வேட்பு மனு தாக்கலின் போது அதிமுகவின்  இரு பிரிவினருக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு மோதல் நடைபெறும் சூழல் உருவானது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் 13 இடங்களில் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. சென்னை. திருவல் லிக்கேணியில் நடைபெற்ற  வேட்பு மனு தாக்கலின் போது அதிமுகவின் இரு தரப்பினருக்கு இடையே  பயங்கர வாக்கு வாதம் நடைபெற்றது. அப்போது  அதிமுக எம்.எல்.ஏ.மற்றும் பகுதி செயலாளர் இடையே ஏற்பட்ட மோதலில் வேட்பு மனு கிழிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

தமிழகத்தில் அரசு அனுமதிப்பெற்ற 18775 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தேர்தல் 5 கட்டங் களாக நடத்தப்பட்டு, கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 18,775 இடங்கள் நிரப்பப்படும் என்று கடந்த மார்ச் மாதம் 7ந்தேதி அறிவிக்கப்பட்டது.

அதன்படி முதல் கட்டமாக   மார்ச் 12-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், பல இடங்களில் மோதல்கள் நடைபெற்றன. இது தொடர்பான வழக்குகள் முடிவடைந்த நிலையில், மீண்டும் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

சென்னையில் திருவல்லிக்கேணியில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தல் மனு தாக்கல் விவகாரமாக அதிமுகவை சேர்ந்த இரு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, வேட்புமனு கிழிக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.