கூட்டுறவு சங்க தேர்தல் 23ந்தேதிவரை இடைக்கால தடை தொடரும்: மதுரை உயர்நீதி மன்றம்

மதுரை:

மிழகத்தில் நடைபெற உள்ள  கூட்டுறவு சங்கத் தேர்தலில், முறைகேடுகள் நடைபெறுவதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்த வழக்கில், இடைக்காலத் தடை வரும் 23ந்தேதி வரை தொடரும் என மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டு உள்ளது.

 

கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதாக,  தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த  மதுரை உயர்நீதி மன்றம் தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில்  நேற்றைய  விசாரணையின்போது, கூட்டுறவு சங்க தேர்தலுக்கான இடைக்கால தடை 23ந்தேதி வரை தொடரும் என்று அறிவித்து உள்ளது.

அடுத்த விசாரணையின்போது, மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் விரிவான ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்  மனுதாரரான அதிமுக தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே அறிவித்தபடி கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் மே 31ந்தேதி நடைபெறும் என  மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.