கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கு விசாரணை முடிவு: ஜூலை 2ந்தேதி தீர்ப்பு

டில்லி:

மிழகத்தில் நடைபெற்று வரும் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை இன்றுடன் முடிவடைந்ததாக சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்து உள்ளது. அடுத்த மாதம் (ஜூலை) 2ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான மேல்முறையீடு வழக்கில் உச்சநீதி மன்றம், இந்த மாதத்திற்குள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில், இன்றுடன் விசாரணை நிறைவு பெற்றதாக சென்னை உயர்நீதி மன்றம் கூறி உள்ளது. அத்துடன்  ஜூலை மாதம் 2ந்தேதி (திங்கட்கிழமை) இந்த வழக்கில்  தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் உள்ள 18,435 கூட்டுறவு சங்கங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இரு கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ம்,  தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்கவும், 3, 4, மற்றும் 5 வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது.

மதுரை உயர்நீதிமன்ற கிளையை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அரசு மற்றும் திமுக தரப்பு வாதங் களை கேட்ட உச்சநீதி மன்றம், தமிழகத்தில்  கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றம் மதுரை கிளை விதித்த தடையை நீக்கியும் கடந்த மாதம் 20ந்தேதி உத்தர விட்டது.

இந்த நிலையில், கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான  மேல்விசாரணையின்போது  கூட்டுறவு தேர்தல் வழக்கை உயர்நீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும்  வேண்டும் என்றும்,  மே மாத இறுதிக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில்,  கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பான  விசாரணை இன்றுடன் முடிவடைந்ததாகவும்,  அடுத்த மாதம் (ஜூலை) 2ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்தது.