சென்னை

மிழ்நாடு உற்பத்தி மற்றும் பங்கீடு வாரியம் நிலக்கரி ஏற்றுமதி செய்ய உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அனல் மின் நிலையங்களில் வடசென்னை, மேட்டூர், எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை முக்கியமானவை ஆகும்.   மாநிலத்துக்கு தேவையான மின்சாரம் இங்கிருந்து உற்பத்தி செய்து தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பங்கீடு வாரியம் மூலம் தமிழ்நாடு மின் வாரியத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.    இந்த அனல் மின் நிலையங்கள் தவிர காற்றுப் பருவத்தில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

மத்திய அரசு நிலக்கரி இறக்குமதியை குறைக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் தெரிவித்திருந்தது.   அதையொட்டி தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பங்கீட்டு வாரியம் நிலக்கரி இறக்குமதியை கடந்த ஆண்டு டிசம்பர் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.   மாநிலத்தில் உள்ள நிலக்கரியின் மூலம் முழுத்தேவையும் நிறைவு பெறாததால்  சிங்கரேனி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வாங்கப்பட்டு வந்தது.    கடந்த செப்டம்பருடன் இந்த நிலக்கரி சுரங்கத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் முடியவே மீண்டும் ஒப்பந்தம் போட முயலப்பட்டது.   ஆனால் சிங்கரேனி சுரங்க நிர்வாகம் தங்களது முழு உற்பத்தியையும் ஆந்திர மாநில அரசுக்கு தருவதாக ஏற்கனாவே ஒப்பந்தம் போட்டுள்ளதாகக் கூறி விட்டது.

இந்நிலையில் தற்போது இருப்பில் உள்ள நிலக்கரி அதிக பட்சமாக மாநிலத்தில் உள்ள அனைத்து அனல் மின் நிலையங்களுக்கும் ஆறு நாட்கள் ஓடும் அளவுக்கே உள்ளது.   எனவே வாரியம் நிலக்கரி இறக்குமதி செய்ய ஆலோசனை செய்து வருகிறது.   வழக்கமாக நிலக்கரி இந்தோனேசியா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப் படுகிறது.   ஒரு சில வேளைகளில், சீனா, ரஷ்யா, மற்றும் தென் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.   தற்போது சர்வதேச அளவில் வாரியம் டெண்டர்  கோரியுள்ளதாக கூறப்படுகிறது.