சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்றும், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதாகவும்  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் 2021ம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் பணிகள் வேகம் எடுக்க தொடங்கி உள்ளன. பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், திமுக தலைவர் ஸ்டாலினும் பல பகுதிகளுக்கு சென்று தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

எந்த கட்சிகள் யாருடன் கூட்டணி என்பது குறித்த நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. இந் நிலையில், அதிமுகவுடன் கூட்டணி என்றும், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதாகவும் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவின் விவரம் வருமாறு: வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கவுள்ளோம். கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம்.  தமாகா எடப்பாடி பழனிசாமி அவர்களை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டது என்று தெரிவித்து உள்ளார்.