பா.ஜ.வுடன் கூட்டணி? முதல்வர் எடப்பாடி பதில்

காஞ்சிபுரம்,

ர இருக்கும் உள்ளாட்சித் தேர்தல்  நேரத்தின்போது எந்த கட்சியுடன் கூட்டணி என்பது தெரிய வரும் என்றும், அப்போது  பாஜக-வுடனான கூட்டணி குறித்து பரிசீலிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார்.

தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகின்றது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எங்களோடு தான் இருக்கின்றனர். யாரும் அவர்களை எங்களிடம் இருந்து பிரிக்க இயலாது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இப்போதே என்னால் எதுவும் கூற இயலாது.

பாஜக உடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி கூறினார்.