பயங்கரவாத தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை ஆகிய பகுதிகளில் கடலோர காவல்படையினர் 3 கப்பல்களிலும், இந்திய கப்பற்படைக்கு சொந்தமான 3 கப்பல்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அங்குள்ள பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.