மீனவர்களைச் சுட்டதற்கு மன்னிப்பு கேட்ட கடலோரக் காவல் படை!

--

ராமநாதபுரம்

மிழ் மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்துக்கு கடலோர காவல் படை மன்னிப்பு கேட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் ரோந்து  வந்த இந்தியக் கடலோரக் காவல் படையினர் இந்தியில் பேசாததால் இரு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நிகழ்த்தினர்.  அதைத் தொடர்ந்து இன்று ராமேஸ்வரம் துறைமுகத்தில்  இன்று நடந்த மீசவ சங்க கூட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டம், மறியல் போராட்டம் நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டது.   மேலும் காவல் நிலையத்தில் கொலை முயற்சி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று ராமநாதபுரம் மண்டபம் முகாமில் கடலோரக் காவல் படை அதிகாரிகளுக்கும் மீனவப் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்தது.  இதில் கடல் ஓரக் காவல் படை அதிகாரிகள் இந்த நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்டதாகவும்  துப்பாக்கியால் சுட்ட வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.   இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என கடலோரக் காவல் படையினர் கூறி வந்துள்ள போது அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

அவர்கள் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்கனவே அறிவித்தபடி மறியல் போராட்டம் வரும் வியாழக்கிழமை அன்று நடக்கும் என மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.