அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்து வருகிறது. கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். AR ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ஏழு வித்தியாசமான தோற்றங்களில் சியான் விக்ரம் உள்ள போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச்செய்தது.
இந்நிலையில் படத்தின் முக்கிய ரோலில் நடிக்கும் இர்ஃபான் பதானின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியானது. அஸ்லான் இல்மாஸ் எனும் இன்டர்போல் அதிகாரியாக நடிக்கிறார். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழு.