‘கோப்ரா’ படத்தில் விக்ரமின் புதிய கெட்டப்….!

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் “விக்ரம் 58” படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது ‘கோப்ரா’.

லலித் குமார் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர். முக்கியக் கதாபாத்திரத்தில் மிருணாளினி நடிக்கிறார்.

கோடை விடுமுறை வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் படப்பிடிப்பு துவங்க அரசு எப்போது அனுமதி அளிக்கும் என படக்குழு காத்திருக்கும் நிலையில் தற்போது விக்ரம் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.