விக்ரமின் ‘கோப்ரா’ படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியீடு…!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்து வருகிறது. கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். AR ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஏழு வித்தியாசமான தோற்றங்களில் சியான் விக்ரம் உள்ள போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச்செய்தது.

இந்நிலையில் கோப்ரா படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில், அனைத்துப் பிரச்சனைகளுக்கும் கணக்கியல் ரீதியான தீர்வு உள்ளது என்று கேப்ஷன் போடப்பட்டுள்ளது. நரம்புப் புடைக்க, தலைமுடியை விரித்துப் போட்டபடி பார்க்கிறார் விக்ரம் .