சென்னை தலைமை செயலகத்தில் நல்லபாம்பு! அரசு அலுவலர்கள் ‘கிலி’

சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்துக்குள் புகுந்த நல்லப்பாம்பு விரட்டப்பபட்ட நிலையில் அருகில் உள்ள புதருக்குள் சென்று மறைந்ததால், அருகில் உள்ள கட்டிடத்தில் பணிபுரிந்து வரும் அரசு அலுவலர்கள் பீதியுடன் பணியாற்றி வருகின்றனர். பாம்பை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் 4ம் என் வாயில் வழியாக நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதை விரட்டும் முயற்சியின்போது, 4ம் எண் வாயிலில் படம் எடுத்து சீறியதால், அருகில் நின்றவர்கள் தலைதெறிக்க  அங்கிருந்து ஓடினர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் உடனே பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில் நல்லபாம்பு அருகே உள்ள புதருக்குள் புகுந்து விட்டது. தற்போது அந்த பாம்பை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இது தலைமைசெயலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Cobra snake entered, government employees are Panic, snake entered, tamil Nadu Secretariat
-=-