ஒரிசா : 11 வெங்காயத்தை விழுங்கிய நாகம்

செண்டிபடா, ஒரிசா

ரிசாவில் ஒரு நாகப்பாம்பு 11 வெங்காயத்தை விழுங்கியது புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒரிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் செண்டிபடா.  இங்கு சுசாந்தா பகேரா என்பவர் வசித்து வருகிறார்.   இவரது இல்லத்துக்குள் ஒரு நாகப் பாம்பு புகுந்துள்ளது.     அதற்காக பாம்புகளைப் பிடிக்கும் சமூக சேவகரான ஹிமன்சு சேகர் என்பவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர் பாம்பை பிடிக்க முயன்ற போது அங்கிருந்த வெங்காயத்தை பாம்பு விழுங்குவதை கண்டு அதிச்யித்துள்ளார்.    உலக வரலாற்றிலேயே பாம்பு வெங்காயத்தை விழுங்குவதைக் கண்டது இதுவே முதல் முறை என தெரிவித்துள்ள அவர் உடனடியாக வெங்காயங்களை அந்த பாம்பை நோக்கி வீசி உள்ளார்.

வீசிய வெங்காயங்களை பிடித்த ஒவ்வொன்றாக விழுங்கி உள்ளது.  இவ்வாறு 11 வெங்காயங்களை அந்த பாம்பு விழுங்கி உள்ளது.   தனது உதவியாளரிடம் தாம் வெங்காயம் வீசும் போது பாம்பு அதை பிடித்து விழுங்குவதை படம் எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.   அந்த படம் வலை தளங்களில் வெளியாகி உள்ளது.