அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இன்று AR ரஹ்மானின் பிறந்தநாளை முன்னிட்டு கோப்ரா படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு செய்திருந்தனர். இத்துடன் கோப்ரா டீஸர் தேதியையும் வெளியிட்டனர்.

வரும் ஜனவரி 9-ம் தேதி கோப்ரா டீஸர் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சியான் விக்ரம்.