டில்லி : கெட்டுப்போன கோகோ கோலாவால் பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு நஷ்ட ஈடு

டில்லி

டில்லியை சேர்ந்த மருத்துவர் ராஜ்மோகன் ஆத்ரேயா.  இவர் கடந்த 2008 ஆம் வருடம் கோகோ கோலா வாங்கி பருகி உள்ளார்.   பருகும் போதே ருசியில் ஏதோ மாறுதல் உள்ளதாக உணர்ந்துள்ளார்.    அந்த பானம் பழையதாக இருக்கலாம் என உடன் இருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சட்டென் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

உடன் இருந்தவர்கள் அந்த கோகோ கோலா பாட்டினுள் பூஞ்சை காளான்  இருந்ததை கண்டு அதிர்ந்துள்ளனர்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நலம் தேறிய ராஜ்மோகன் கோகோ கோலா நிறுவனத்தின் மீது தன் உடல் நலம் பாதிக்கப்பட்டதற்காக நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் கோகோ கோலா நிறுவனம் மருத்துவருக்கு ரூ.24,606 நஷ்ட ஈடு வவழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. அதை எதிர்த்து கோகோ கோலா நிறுவனம் டில்லி மாநில நுகர்வோர் முறையீட்டு மையத்தில் மேல் முறையீடு செய்தது.   அங்கும் இந்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.