‘சாம்பியன் ஆப் தி எர்த்’: கொச்சி விமான நிலையத்துக்கும் ஐ.நா. சிறப்பு விருது!

கொச்சி

லகிலேயே சூரிய சக்தியால் இயங்கும் முதல் விமான நிலையம் என்ற பெயரை கொச்சி விமான நிலையம் பெற்றுள்ளது. அதற்காக அந்த விமான நிலையத்துக்கு  ‘சாம்பியன் ஆப் தி எர்த்’ விருது வழங்கி ஐ.நா. கவுரவித்து உள்ளது.

2018ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதான  ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருது, பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொச்சி விமான நிலையத்துக்கும் சாம்பியன் ஆப் எர்த் வருதும் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரள மாநிலம் சார்பாக கொச்சி பன்னாட்டு விமான நிலைய தலைவர் விஜே குரியன் விருதை பெற்றார்.

விஜே. குரியன்

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்காற்றி, சர்வதேச அளவில் சிறப்பாக செயல் பட்டுவருபவர்களை விருது வழங்கிக் கௌரவித்துவருகிறது ஐக்கிய நாடுகள் சபை. அந்த வகையில், பிரதமர் மோடிக்கு ”சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்” என்ற விருதை ஐ.நா அறிவித்து உள்ளது.

இந்த நிலையில்,   உலகிலேயே சூரிய சக்தியால் இயங்கும் முதல் விமான நிலையம் என்ற பெயரை கொச்சி விமான நிலையம் பெற்றுள்ளது. அதற்காக அந்த விமான நிலையத்துக்கும் சாம்பியன் ஆப் தி எர்த் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கேரளாவில் உள்ள கொச்சி விமான நிலையமும் ஒன்று. இந்த விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் சோலார் மின்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த கொச்சி விமான நிலையம்தான் கேரளத்தின் மிக அதிக போக்குவரத்து கொண்ட விமான நிலையம் ஆகும். இந்தியாவிலேயே அதிக போக்கு வரத்து கொண்ட நகரங்களின் பட்டி யலில் இந்த விமான நிலையம் 4வது இடத்தில் உள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு மின்சார கட்டணம் 6 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்ந்தது. ஆகையால், இதற்கு மாற்றுவழியை உபயோகிக்க முடிவுசெய்யப்பட்டது, சூரிய மின்சக் தியால் இயங்கும் விமான நிலையமாக மாற்றம் செய்யப்பட்டது.

இந்த விமான நிலையத்தில், கடந்த 2012 ஆம் ஆண்டு 100 கிலோவாட்ஸ் மின்சாரம் பெறப்பட்டது. ஆனால் தற்போது, அதன் அளவு அதிக அளவில் உயர்ந்துள்ளது. தற்போது 29.5 மெகாவாட்ஸ் மின்சாரம் இதன்மூலம் பெறப்படுகிறது.

இதில் பெறப்படும் மின்சாரமே கன்வேயர் பெல்ட்ஸ் முதல் டிஜிட்டல் அமைப்புகள் வரை பயன்படுத்தப்படுகிறது. இதுவரை எந்தவொரு சிக்கலோ பிரச்சினையோ ஏற்பட்டதே இல்லை.

கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும், 1 கோடி மக்கள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி பயணம் செய்துள்ளனர். இதில், 55 லட்சம் பேர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிலைய மேற்கூரை, ஹாங்கர்ஸ், கார் பார்க்கிங் பகுதிகளில் கூரையின் மேல், சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விமான நிலையத்தின் 45 ஏக்கரில் இந்த சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆண்டு ஒன்றுக்கு ரூ.40 கோடி ரூபாய்  அளவில் சேமிக்கப்படுவதாக கூறப்படு கிறது.

அதுமட்டுமல்லாமல், இந்த விமான நிலையத்தில் இயற்கையான முறையில் காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. அவை அருகாமையில் உள்ள மார்க்கெட்டுகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கு விற்கப்படுகின்றது.

இதன் காரணமாக, ஐ.நா.வின் சுற்றுச்சூழல் அமைப்பு, மிக உயர்ந்த விருதான  ‘சாம்பியன் ஆப் எர்த்’  என்ற விருதை கொச்சி விமான நிலையத்துக்கு வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது.

You may have missed