ஜீ5 ஓடிடி தளத்தில் ஜூலை 10-ம் தேதி வெளியாகும் யோகிபாபுவின் ‘காக்டெய்ல்’ ….!

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் ஆகின்றன.

திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருக்கிறார்கள்.

இதனால், தயாராகி இருக்கும் படங்கள் பலவும் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.

தற்போது ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘காக்டெய்ல்’ படம் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது. ஜீ5 ஓடிடி தளத்தில் ஜூலை 10-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.