பூகம்பம் தாக்காத கட்டிடம் உருவாக்க, ஐடியா கொடுத்த  தேங்காய்!

பூகம்பத்தால் பாதிக்கப்படாத கட்டிடங்கள் கட்ட முயற்சி செய்துகொண்டிருக்கும் விஞ்ஞானிகளுக்கு தேங்காய் புது ஐடியாவை கொடுத்திருக்கிறது!

 

சமீப காலமாகவே உலகின் பல பகுதிகளில் பூகம்பம் ஏற்பட்டு கட்டிடங்கள் அடியோடு அழிந்து மனிதர்கள் பலியாகி வருவது நடக்கிறது.  ஆகவே பூகம்பத்தால் பாதிக்கப்பட்டாத கட்டடங்களை உருவாக்கும் முயற்சியில் உலகெங்கும் உள்ள கட்டுமான ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

அந்த வகையில் ஜெர்மன் நாட்டிலுள்ள பிரேய்பர்க் பல்கலைக் கழகத்திலும் கட்டுமான துறை விஞ்ஞானிகள், ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறார்கள்.

 

இவர்களுக்குத்தான், பூகம்பத்தால் பாதிக்கப்படாத கட்டிடங்கள் கட்ட, தேங்காய் ஒரு முன்மாதிரியாக இருக்கிறதாம்.

coconut

இந்த விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் ஸ்டீஃபன், “கீழே விழும் தேங்காய் உடையாமல் இருப்பது குறித்து யோசித்தோம். தேங்காயின் வடிவமைப்பின் ரகசியத்தைத் தெரிந்துகொண்டால்,பூகம்பங்கள், மலைச்சரிவு மற்றும் இதர இயற்கைஅல்லது மனிதனால் ஏற்படுத்தப்படும்ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்கும் வலுவானகட்டிடங்கள் கட்ட முடியும் என்று கருதுகிறோம். தற்போது தேங்காயை அடிப்படையாக வைத்து, எங்களது கட்டிட ஆராய்ச்சி தொடர்கிறது” என்கிறார்.

ஆப்பிள் கீழே விழுந்ததைப் பார்த்த நியூட்டன், புவி ஈர்ப்பு விசை குறித்த கோட்பாட்டை உருவாக்கினார். இப்போது தேங்காய் கீழே விழுவதை வைத்து, பூகம்பததால் பாதிக்கப்பட்ட கட்டிடங்களை உருவாக்கும் ஆராய்ச்சி நடக்கிறது!