எத்தியோப்பியா:

எத்தியோப்பியாவில் காபி கொட்டை விலை சரிவால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


காபி உற்பத்தியில் ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா முன்னணியில் இருக்கிறது. இங்கு தரமான காபிக் கொட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதால் ஐரோப்பிய நாடுகளில் இதற்கு பெரும் வரவேற்பு உள்ளது.

காபிக் கொட்டைகள் கொள்முதல் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இத்தகைய போக்கு சமூகப் பேரழிவை ஏற்படுத்தும் என்று பன்னாட்டு நிறுவனங்களை எத்தியோப்பிய விவசாயிகள் எச்சரிக்கின்றனர்.

இதே நிலை தொடர்ந்தால், காபி பயிரிடுவதையே விவசாயிகள் கைவிடும் நிலை ஏற்படும் என்று அஞ்சுகின்றனர்.

எத்தியோப்பிய பண்டக பரிமாற்றத்தால் நடத்தப்படும் தினசரி ஏலங்களில் பெரும்பாலும் உள்சந்தை விலை நிர்ணயிக்கப்படுகிறது, ஆனால் விலைகள் உலகளாவிய எதிர்கால சந்தையில் போக்குகளுடன் நெருக்கமாக தொடர்பு கொள்கின்றன.

இந்த காபி கொட்டைகளை ஐரோப்பிய நாடுகளே பெருமளவு கொள்முதல் செய்கின்றன. அதன்பின்னர் கொட்டைகளை வறுத்து, பவுடராக்கி, பாக்கெட்களில் அடைத்து விற்கின்றன.

பல மடங்கு லாபம் ஈட்டும் பன்னாட்டு நிறுவனங்கள் காபிக் கொட்டை கொள்முதலில் கவனம் செலுத்தி, விவசாயிகளுக்கு அதிக விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இல்லையேல், எங்கள் அடுத்த தலைமுறை காபி விவசாயத்தையே மறந்து விடுவர் என்கின்றனர் எத்தியோப்பிய விவசாயிகள்.