டெல்லி:

பிரபல மென்பொருள் நிறுவனமான சிஎடிஎஸ் எனப்படும் காக்னிசன்ட் நிறுவனம் 18ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கப்போவதாக அறிவித்துள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்குப் பதிலாக 23ஆயிரம் மாணவர்களை புதிதாக வேலைக்கு சேர்க்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.

உலகின் முன்னணி கம்ப்யூட்டர்  நிறுவனங்களில் ஒன்றான சிடிஎஸ் ஐடி நிறுவனம், சிக்கன நடவடிக்கை காரணமாக 18,000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் யூஜெர்சியை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் கிளைகள் இருந்தாலும், அதிக அளவிலான கிளைகள் இந்தியாவில், அதுவும்  சென்னையில்தான் உள்ளன. சுமார் 3 லட்சம் பேர் பணியாற்றும் இந்த நிறுவனத்தில் 2லட்சத்துக்கும் மேற்பட்டோர்கள் இந்தியர்கள்.

இந்த நிலையில், சிக்கன நடவடிக்கை காரணமாக,  வரும் மாதங்களில் படிப்படியாக பலரை பணிநீக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 18,000 பேரை பணி நீக்கம் செய்வதற்கு காக்னிசன்ட் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், வேலைநீக்கம் பற்றும் பணிக்கு புதிய ஆட்கள் சேர்ப்பு குறித்து சிடிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் (இந்தியா) ராம்குமார் ராமமூர்த்தி கூறியிருப்பதாவது,

இந்தியாவில் மட்டும் நாங்கள் 23,000 க்கும் மேற்பட்ட மாணவர்களை வேலைக்கு அமர்த்துவோம், இந்த எண்ணிக்கையில் பிபிஓ செயல்பாடுகள் இல்லை. எங்கள் திட்டம் STEM துறைகள் மற்றும் முதன்மையாக பொறியியலில் இருந்து மாணவர்களை வேலைக்கு அமர்த்துவோம் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில், காக்னிசன்டில் ஆட்கள் சேர்ப்பு  சீராக வளர்ந்து வருகிறது  என்று கூறியவர், கடந்த  “2014 முதல் 2018 வரை இந்தியாவில் 66,000 ஊழியர்களை வேலைக்குச் சேர்த்து உள்ளதாகவும். இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்கு 9,000 ஊழியர்களை சேர்த்துள்ளோம் என்றும் தெரிவித்து உள்ளார்.

அதேவேளையில், வரவிருக்கும் காலாண்டுகளில் தற்போது வேலை செய்து வருபவர்களில், நடுத்தர முதல் மூத்த மட்டம் வரை சுமார் 5,000 முதல் 7,000 பேரை  அகற்றுவதற்கான கடினமான முடிவை எடுத்துள்ளதாகவும் ஐடி நிறுவனம் கூறியது. இது மொத்த தொழிலாளர்களின் தொகையில் வெறும் 2சதவிகிதம் மட்டுமே என்றும் மேலும் 5ஆயிரம் பேரை   மறு திறன் மற்றும் மறுபயன்பாடு செய்வதையிடத நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்து உள்ளார்.