சென்னை:
கொரோனா லாக்டவுனால் பெரும்பாலான தொழில்நிறுவனங்கள் முடங்கி உள்ள நிலையில், பிரபல மென்பொருள் நிறுவனமான காக்னிஷன்ட் 400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளது.

கொரோனா டாக்டவுனால் உலக பொருளாதாரமே வீழ்ந்தியடைந்துள்ள நிலையில், கோடிக்கணக்கானோர் வேலையிழந்து உள்ளனர். இந்த நிலையில், பல்வேறு மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும்படி பணித்துள்ளன. இந்த சூலில் சி.டி.எஸ். நிறுவனம்  400 பணியாளர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சிடிஎஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது,
உலகம் முழுவதும் உள்ள எங்களது நிறுவனக் கிளைகளில் 2.90 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். தற்போதைய பொருளாதார நிலவரப்படி, நிறுவனத்தின் நிதி நிலைமையை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
அதன் காரணமாக,  நிறுவனத்தின் கொள்கைகளின்படி, தன்னார்வ பிரிப்புத் திட்டத்தின் கீழ் 400 ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது எந்தவொரு திட்டத்திலும் ஈடுபடாத பணியாளர்களை மட்டும் தாமாக முன்வந்து பணியில் இருந்து விலக முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பெரும்பாலான கிளைகளில் மூத்த அதிகாரிகளுக்கு 25% வரையிலான ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதுடன், பல இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், துணைத் தலைவர், மேலாளர்கள் உள்பட பலர் வேலையின்றி,  பெஞ்சில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் 400 பேரை வெளியேற்ற நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.