கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். கொரோனா தொற்று அதிகம் காணப்படும் பகுதிகளில் அவர் நேரில் சென்றும் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார்.
இந் நிலையில் அவருக்கு சில நாட்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையின்  முடிவில் அவருக்கு கொரோனா உறுதியானது.
அதை தொடர்ந்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் ஆட்சியர் ஒருவர் கொரோனா தாக்கி சிகிச்சை பெற்று வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.