கோவை : ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை

--

கோயம்புத்தூர்

யுதப்படையை சேர்ந்த காவலர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

 

கோவை மாவட்டம் கோவைப்புதூரில் தமிழ்நாடு சிறப்புப்படை 4 பிரிவு அலுவலகம் உள்ளது.  இந்து அமர்நாத் என்னும் 25 வயது இளைஞர் ஆயுதப்படை காவலராக பணி புரிந்து வந்தார்.  அமர்நாத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் ஆவார்.

நேற்று பணி முடிந்த பின் அமர்நாத் தனது அறைக்கு சென்று தங்கி உள்ளார்.   அதன் பிறகு அவர் தனது அறையில் நைலான் கயிற்றைக் கொண்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.  அவருடைய சக ஊழியர்கள் அவரை தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கண்டு அதிர்துள்ளனர்.

அவர்கள் உடனடியாக தங்கள் உயர் அதிகாரிகளுக்கும் குனியமுத்தூர் காவல் நிலையத்துக்கும் தகவல் அளித்துள்ளனர்.   தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் நிலைய அதிகாரிகள் அமர்நாத் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி உள்ளனர்.

அமர்நாத் தற்கொலைக்கு சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.  இது குறித்து பணி சுமையா அல்லது மேலதிகாரிகள் தொல்லையா அல்லது காதல் விவகரமா என பல கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.