பெட்ரோல் வாங்க கடன் வசதி அளிக்கும் நிதி நிறுவனம்

கோயம்புத்தூர்

தனியார் நிதி நிறுவனத்தினர் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க கடன் உதவி அளிக்க உள்ளனர்.

வாகனம் வாங்க பல நிதி நிறுவனங்கள் கடன் உதவி அளித்து வருவது சகஜமான ஒன்றாகும். பெட்ரோல் மற்றும் டீசல் விற்கும் விலையில் கடனில் வாங்கினாலும் எரிபொருள் செலவுக்கு யார் பணம் தருவார்கள் என பலரும் கூறுவது வழக்கம்.   அவ்வாறு பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க கடன் வழங்கும் திட்டத்தை கோவையை சேர்ந்த் ஒரு நிதி நிறுவனம் அளிக்க உள்ளது.

வாகன கடன் வழங்கும் இந்த தனியார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண் பதிவு மூலம் பெட்ரோல் மற்றும் டீசலை கடனில் பெற்றுக் கொள்ளலாம். பின்னர் அந்த தொகை வட்டியுடன் வசூலிகப்படும். இந்த திட்டம் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன பெட்ரோல் பங்குகளில் அறிமுகபடுத்தப் பட்டுள்ளது.

சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளனர். அதற்கு காரணம் தற்போது டீசலுக்கு லிட்டருக்கு 85 காசுகள் மானியம் வழங்கப்படுகிறது. இந்த வட்டியை மானியத் தொகையில் நிதி நிறுவனம் பிடித்தம் செய்துக் கொள்கிறது. ஆகவே கடனால்  பாதிப்பு அதிகம் இருக்காது என கூறப்படுகிறது.