கோவை:

கோயமுத்தூரில், இன்று காலை சுமார் 1மணி நேரத்தில் ஊரடங்கை மீறி வெளியே வந்த வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள்  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இருந்தாலும், மக்கள் தடையை மீறி வெளியே சென்று வருவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நோக்கில், வெளியே சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், வெளியே செல்பவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் காரணம் இல்லாமல் வெளியே செல்பவர்களுக்கு நூதன தண்டனைகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவையில் இன்று காலை தடையை மீறி, எந்தவித அத்தியாவசிய தேவையுமின்றி வாகனங்களில் சென்றைவர்களை காவல்துறையினர் மடக்கி வழக்கு பதிவு செய்தனர். சுமார் 1 மணி நேரத்தில் 100க்கு மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும்,ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.