கோவை: வரும் 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ தமிழகஅரசு தடை விதித்துள்ள நிலையில், விநாயகர் சிலைவைக்க அனுமதி கோரி முகக்கவசம் அணியாமல் மனுகொடுக்க வந்த இந்துமக்கள் கட்சி நிர்வாகியை  கோவை ஆட்சியர், எச்சரித்து திருப்பி அனுப்பினார்.

தமிழகத்தில் 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக, பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவோ, ஊர்வலம் நடத்தவோ தமிழகஅரசு தடை போட்டுள்ளது.

இந்த நிலையில்,  கோவையில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி, இந்துமக்கள் கட்சியின் நிர்வாகி, மாவட்ட ஆட்சியர் ராசாமணியை சந்திக்க இன்று காலை ஆட்சியர் அலுவலகம் வந்திருந் தார்.

அவரிடம் மனு வாங்கிய ஆட்சியர், அவர் முகக்கவசம் அணியாதை பார்த்தவுடன், அவரை எச்சரித்ததுடன்  மனுவை திருப்பிகொடுத்து, அங்கிருந்து வெளியேறச் செய்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.