கொரோனாவில் இருந்து குணம் பெற்ற கோவை ஆட்சியர்: 26 நாட்கள் கழித்து பணிக்கு திரும்பினார்

கோவை: கொரோனாவில் இருந்து குணமடைந்த கோவை ஆட்சியர், 26 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பினார்.

தமிழகத்தில் பொதுமக்களை மட்டுமல்லாது, மருத்துவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரையும் கொரோனா தாக்கியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

அந்த அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். பரிசோதனையில் உறுதியானதால் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

பல கட்ட சிகிச்சைகளுக்கு பிறகு அவர் முழு குணம் பெற்றார். இந் நிலையில் கிட்டத்தட்ட 26 நாட்கள் கழித்து அவர் இன்று மீண்டும் பணிக்கு திரும்பினார். 26 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பியுள்ள அவரை அதிகாரிகள் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.