கொரோனாவில் இருந்து குணம் பெற்ற கோவை ஆட்சியர்: வீடு திரும்பியதாக மருத்துவமனை தகவல்

கோவை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி முழு குணம் பெற்று வீடு திரும்பினார்.

தமிழகத்தில் கொரோனாவால் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சத்தில் இருக்கிறது. அமைச்சர்கள், போலீசார், மருத்துவர்கள் என பல தரப்பு மக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாரும் எதிர்பாராத வண்ணம் கோவை ஆட்சியர் ராசாமணிக்கு கடந்த 13ம் தேதி கொரோனா தொற்று இருப்பதி உறுதியானது. இதையடுத்து அவர் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந் நிலையில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராசாமணி தொற்றிலிருந்த குணமடைந்தார்.  கோவை ஆட்சியர் ராசாமணி கொரோனாவிலிருந்து முழு குணமடைந்து வீடு திரும்பி உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.