கோவை விமானத்தில் திடீர் கோளாறு….பயணிகள் தப்பினர்

மும்பை:

கோவையில் இருந்து மும்பை நோக்கி ஏர் இந்தியா விமானம் இன்று புறப்பட்டது.

புறப்பட்ட சிறிது நேரத்தில் ஹைட்ராலிக்சில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மும்பை சர்வதேச விமானநிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.