மூத்தோருக்கான தடகளம்: சீனாவில் நடைபெற்ற போட்டியில் 3 பதக்கங்கள் வென்ற தமிழர்!

சீனாவில் கடந்த மாதம்  நடைபெற்ற மூத்தோருக்கான தடகள போட்டியில் 3 பதக்கங்களை வென்று தமிழகத்தை சேர்ந்த சுப்பையா காந்தி சாதனை படைத்துள்ளார்.

சீனாவில்  மூத்தோருக்கான தடகள போட்டி கடந்த மாதம்  நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து கோவை மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்த 75வயது  மாஸ்டரான  சுப்பையா காந்தி என்பவர் கலந்துகொண்டார்.

ஆசிய அளவில் 75-79 வயது பிரிவுகளில்  நடைபெற்ற தடகள போட்டியில், குண்டு எறிதலில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மேலும், நீளம் தாண்டுதலில் வெள்ளி பதக்கமும், வட்டு எறிதலில் வெண்கல பதக்கத்தையும் சுப்பையா காந்தி வென்றுள்ளார்.

தமிழரான சுப்பையா இதுவரை  65 வயது முதல் மூத்தோருக்கான சர்வதேச தடகள போட்டிகளில் கலந்துகொண்டடு 12 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.