கோவை வடக்கு அதிமுக எம்எல்ஏ பன்னீர் அணிக்கு தாவல்

கோவை:

கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்குமார் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சசிகலா அணியினருக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிரமாக செயலபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக அதிமுக எம்.பி.க்கள் 12 பேர், எம்எல்ஏ.க்கள் 11 பேர் உள்ளனர். மேலும் பல முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 5 ஓட்டுக்களில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தப்பியது. இந்நிலையில் கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்குமார் இன்று பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
முன்னதாக இவர் கூவத்தூரில் இருந்து தப்பிச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

Leave a Reply

Your email address will not be published.