எடப்பாடி குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்எல்ஏ மீது கோவை போலீசார் வழக்கு

கோவை:

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி குறித்து அவதூறாக பேசியதாக காஞ்சிபுரம் திமுக சட்ட மன்ற உறுப்பினர் மீது கோவை போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பொதுக்கூட்டத்தில் திமுக எம்எல்ஏ கலையரசன் பேசிய காட்சி

கடந்த 3ந்தேதி கோவை சித்தாப்புதூரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, திமுக மாநில மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன்  கலந்துகொண்டுபேசினார்.  அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி, கோவை மாவட்ட அமைச்சர் வேலுமணி குறித்தும் ஊழல் குற்றச்சாட்டு கூறினார்.

இதையடுத்து, கோவை  காட்டூர் போலிசார் தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர் வேலுமணி குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்எல் எழிலரசன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.