கோவை:  ராஜாமணி கொலை வழக்கில் வெளி மாநில தொழிலாளர்கள் கைது

கொலை செய்யப்பட்ட ராஜாமணி

கோவை,

கோவை அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த முதியவர்களை தாக்கி கொலை செய்துவிட்டு அந்த வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டது, அந்த வீட்டில், டைல்ஸ் ஒட்டும் வேலை செய்த வடமாநிலத்த வர்கள் என்பது தெரிய வந்தது. 3 பேர் சேர்ந்து கொள்ளை சம்பத்தில் ஈடுபட்டதும், அதன் காரணமாக ராஜாமணி என்ற முதிய பெண்மணியை கொலை செய்தும், அவரது கணவரை மூட்டையில் அடைத்து வைத்து, மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

கொலை-கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள்

இதுகுறித்து விசாரணை செய்து வந்த தனிப்படையினர், கொள்ளையர்கள் பிடிக்க மேற்குவங்கம் விரைந்தனர். அங்கு கொள்ளையர்களை மேற்குவங்க போலீசார் உதவியுடன் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.