கோவை கலவரம்: குட்டி கோமாதாவை களவாடிய இந்து முன்னணி!

--

கோவை:

கோவையில் வன்முறை வெறியாட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர் கலவர சூழலை பயன்படுத்தி கன்று குட்டி ஒன்றை திருடிச் சென்றதாக சி.பி.ஐ. (எம்) கட்சியின் மூத்த தலைவர் உ. வாசுகி தெரிவித்துள்ளார்.

கோவையில் இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமார் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.  அவரது இறுதி ஊர்வலத்தின் போது இந்து முன்னணியினர் வன்முறையில் இறங்கினர்.

hindu-munnai-d60-600-26-1474893917

வன்முறை பாதித்த இடங்களைப் பார்வையிட்ட சி.பி.ஐ. (எம்) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உ. வாசுகி தெரிவித்துள்ளதாவது:

“பல கடைகளில் பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. மீதி கொளுத்தப்பட்டுள்ளன.

கொள்ளையடிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வந்த செல்போன் கடையைப் பார்த்தோம். உரிமையாளர், விரக்தியில் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் உள்ளார். ரூ.60 லட்சம் இழப்பு. அவர் இசுலாமியர்.

5,6 வீடுகள் சில்லு சில்லாக நொறுங்கிக் கிடக்கின்றன. அவர்களின் மாட்டுக்கறி கடை தகர்க்கப்பட்டுள்ளது. மாட்டின் மீது அக்கறை என நினைத்து விடாதீர்கள். அங்கிருந்த மாடுகள் அடிக்க பட்டு, ஒரு கன்றுக்குட்டி இரு சக்கர வாகனத்தில் அபேஸ் செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு வாசுகி கூறியதாக சிபிஎம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.