கோவை – சேலம் பயணிகள் ரயில் 4 சனிக்கிழமைகளில் ரத்து! ரயில்வே அறிவிப்பு

சேலம்:

கோவை – சேலம் இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் 4  சனிக்கிழமைகளில் இயங்காது என்று  ரயில்வே அறிவித்து உள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காக தற்காலைகமாக  கோவை – சேலம்  பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை – சேலம் இடையே பயணிகள் ரயில்கள் எண் 66602, 66603 ஆகியவை தினசரி இயக்கப் பட்டு வருகின்றன. இந்த நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக நவம்பர் 17, 24, டிசம்பர் 1, 8 ஆகிய 4 சனிக்கிழமைகளில் மட்டும் இந்த ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், பாலக்காடு கோட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொறியியல் பணிகள் காரணமாக கோவை – திருச்சூர் பயணிகள் ரயில் (எண் 56650) சேவை நவம்பர் 17, 19, 21 ஆகிய தேதிகளில் பகுதியளவு, அதாவது ஷோரனூர் – திருச்சூர் இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.