கோயம்புத்தூர் சிருங்கேரி சாரதாம்பாள் கோயில்

கோயம்புத்தூர் சிருங்கேரி சாரதாம்பாள் கோயில்

கோயம்புத்தூரில் உள்ள சிருங்கேரி சாரதாம்பாள் கோவில் குறித்த பதிவு

கோயம்புத்தூர் ராஜவீதியில் சிருங்கேரி சங்கரமடம் உள்ளது. இது நூறு ஆண்டு பழமையானது. உள்ளே சாரதாம்பாள் கோயில் உள்ளது. சாரதாம்பாள் தவிர விநாயகர்,முருகன் விக்ரகங்கள் உள்ளன.

இங்குக் கல்யாண மண்டபமும் இருக்கிறது. 1979ல் ரேஸ் கோர்ஸ் சாலையில் சாரதாம்பாள் கோயில் கட்டும் வரை இங்கு தான் சாரதாம்பாள் கோயில் இருந்தது.

பூஜ்யஸ்ரீ மஹாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகளின் கோயமுத்தூர் விஜய யாத்திரையின் போது தர்மாதிகாரி சூலூர் நஞ்சுண்டையாவின் குடும்பத்தினர் ரேஸ் கோர்ஸ் சாலையில் 1.5 ஏக்கர் நிலத்தை சாரதாம்பாள் கோயில் கட்ட நன்கொடையாக அளித்தனர்.

இந்த கோயிலின் கும்பாபிஷேகம் 1979ல் நடைபெற்றது.

சாரதாம்பாள்,ஆதிசங்கரர், பால விநாயகர், பாலமுருகர், தேவி சண்டிகா பரமேஸ்வரி இங்கு தரிசனம் தருகின்றனர். இங்கு யஜுர்வேத பாடசாலை, கல்யாண மண்டபமும் உள்ளது.

அமைதியான சூழலில் இந்த சாரதாம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. கோயம்புத்தூர்செல்லுபவர்கள் கண்டிப்பாகத் தரிசனம் செய்ய வேண்டிய கோயில்.