கோவை: லஞ்ச வழக்கில் துணைவேந்தர் மனைவியும் கைது

--

கோவை:

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் மனைவியும் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி லஞ்சம் பெற்றதாக இன்று கைது செய்யப்பட்டார். கோவை, திருச்சியில் உள்ள அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இடைத்தரகரிடமும்ம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கணபதியின் மனைவி சொர்ணலதா 2,000 ரூபாய் நோட்டுக்களை கிழித்து கழிவு நீர் தொட்டியில் விசினார்.

தடயங்களை அழிக்க முயற்சி செய்ததாக சொர்ணலதாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். இடைத்தரகராக செயல்பட்ட பேராசிரியர் தர்மராஜையும் போலீசார் கைது செய்துள்ளனர்.