சென்னை,

தாமிரபரணி ஆற்றில் இருந்து பெப்சி, கோக் ஆலைகள் தண்ணீர் எடுப்பதை எதிர்த்து நெல்லை மாவட்ட விவசாயிகள்  போராட்டம் நடத்தினர். இதுகுறித்து வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தண்ணீர் எடுக்க குளிர்பான ஆலைகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர். அதில், ஆலை களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியும், தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்தனர்.

இதையறிந்த அந்த பகுதி இளைஞர்கள், ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தாமிரபரணி ஆற்றில் இறங்கி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தாமிரபரணி ஆற்றில் இறங்கி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோர்ட்டு உத்தரவை எதிர்த்து அந்த பகுதி விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.