சளி, இருமல், காய்ச்சல், தும்மல் இருப்பவர்கள் திருப்பதிக்கு வர வேண்டாம்! தேவஸ்தானம் வேண்டுகோள்

திருமலை:

ளி, இருமல், காய்ச்சல், தும்மல் போன்ற பாதிப்புகள் உள்ள பக்தர்கள்,  பாதிப்புகள் சரி ஆகும் வரை திருப்பதி மலைக்கு வருவதைத் தவிரக்க வேண்டும்என்று திருப்பதி  தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பக்தர்கள் அனைவரும் தெர்மல் கன் மூலம் கொரோனா  சோதனை செய்தபிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் ஊடுருவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பொதுஇடங்களில் மக்கள் கூட வேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. பொதுவாக திருப்பதி ஏழுமலையானை சந்திக்க தினசரி லட்சக்கணக்கானோர் திருப்பதியில் கூடுவார்கள். இதனால், அங்கு கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்க,  தேவஸ்தான உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில்,  திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தவிர்க்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யத் தேவஸ்தானம் முடிவெடுத்து உள்ளது. பக்தர்கள் அனைவரும் தெர்மல் கன் எடுப்படும் சோதனைக் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும், கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் தேவஸ்தானம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது,

திருமலைக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்றும், கை, கால்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்

 சளி, இருமல், காய்ச்சல்,தும்மல் ஆகிய பாதிப்புகளுடன் திருப்பதி மலையில் பக்தர்களுக்குக் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட வர்களுக்கு மருத்துவப் பரிசோதனை திருப்பதி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத்  உத்தரவிடப்பட்டு உள்ளது.

காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பவர்கள், ஏழுமலையானை தரிசிக்க வர வேண்டாம்

கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் திருமலை வந்தால், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி மலையில் உள்ள எல்இடி திரைகள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தவிர்க்கத் தேவையான விழிப்புணர்வு தொடர்பாக ஒளிபரப்பு செய்யப்படும்

ஒருவர் மூலம் மற்றொருவருக்கு கொரோனா தொற்று எளிதாகப் பரவ வாய்ப்புள்ளது. அதே வேளையில், கடவுளை வழிப்பட வரும் இடத்தில், மக்கள் இந்த கொடிய நோயால் பாதிக்கப்படுவது சங்கடங்களை உண்டாக்கிவிடும். எனவே, நோயாளிகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தெர்மல் கன் எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து அறியும் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும்  தேவஸ்தானம் தரப்பில்   அறிவிக்கப்பட்டு உள்ளது.