சோழிங்கநல்லூரில் சோகம்: மண்சரிந்து இரண்டு தொழிலாளர்கள் பலி!

சென்னை,

சென்னை அருகே சோழிங்கநல்லூர் பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டியபோது மண் சரிந்தது. இதில் சிக்கிய இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை சோழிங்கநல்லூரில் இன்று காலை பாதாள சாக்கடை தோண்டும் பணி நடைபெற்றது. இதில் இரண்டு பக்கமும் மண் சரியாமல் இருக்க இரும்பு தடுப்பணைகள் கொண்டு பாதுகாப்புடன் பணி நடைபெற்றது. தொடர்ந்து பாதாள சாக்கடைக்கான குழாய் பதிக்கப்பட்டு, தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகைள அகற்றியுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டது. இந்த திடீர் விபத்தில் அப்போதுழ பணியாற்றி கொண்டிருந்த இரண்டபேர் மணலுக்குள் சிக்கினர்.

இதைத்தொடர்ந்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  மீட்பு படையினர் விரைந்துவந்து மணலுக்குள் புதைந்த தொழிலாளர்களை மீட்டனர்.

ஆனால்,  இந்த விபத்தில் 2 தொழிலாளிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.