வேலூர் மாவட்டத்தில் 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக ஆட்சியர் தகவல்…

வேலூர்:

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, வேலூர் மாவட்டத்தில் 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டி ருப்பதாக  மாவட்ட ஆட்சியர் தகவல தெரிவித்து உள்ளார். மேலும்,   9 பேரிடமிருந்து ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் கூறி உள்ளார்.

இந்தியாவை மிரட்டி வரும் கொரோனா, தமிழகத்திலும் அதிவேகமாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில்,  வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக தீவிரமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட  ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்து உள்ளார்.

மேலும்,. வேலூர் மாவட்டத்தில் 600 நபர்கள் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரையில் சந்தேகத்திற்கிடமான 9 நபர்களிடமிருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அதில் 7 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.