டெல்லி: வரும் 30ந்தேதிக்குள் கல்லூரி இறுதித் தேர்வுகளை முடிக்க வேண்டும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்  ரமேஷ் பொக்ரியால் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இறுதி செமஸ்டர்களை நடத்தி முடிக்க அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்வி ஆணையமான யுஜிசி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், பாராளுமன்றத்தில் இது தொடர்பாக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்  ரமேஷ் பொக்ரியால் யுஜிசி ஆணைப்படி செப்டம்பர் 30ம் தேதிக்குள் கல்லூரி தேர்வுகளை முடிக்க வேண்டும் என்றார்.

மேலும், கொரோனா பாதிப்பு காரணமாக,  மேற்குவங்கம், பஞ்சாப், ஒடிசா, மேகாலயா, மகாராஷ் டிரா மாநிலங்கள் அவகாசம் கோரியிருப்தாகவும், அந்த மாநிலங்கள்  யுஜிசியை நாடியுள்ளதாகவும்  ரமேஷ் பொக்ரியால்  தெரிவித்துள்ளார்.