கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் அன்பழகன்

சென்னை:

கொரோனவை முழுமையாக கட்டுப்படுத்திய பின் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் ஊரடங்கு  காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது 5வது கட்ட ஊரடங்கு ஜூன் 30ந்தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ள நிலையில், பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 10வது வகுப்பு, 11ம் வகுப்பு தேர்வுகள் ரத்து  வைக்கப்படுவதாக தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். கல்வி அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பத்தாம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்புத்தேர்வு ரத்து செய்வதாகவும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என அறிவித்தார்.

இந்த நிலையில், செய்தியளார்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று தற்போது கூற இயலாது. கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் தற்போது அரசின் நோக்கம்.

கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்திய பின் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என  தெரிவித்தார்.